புதன், 18 பிப்ரவரி, 2009

பருப்பு உருண்டைகுழம்பு

தேவையான பொருட்கள் ;-
பொடியாக நறுக்கிய வெங்கயாம் : அரை கப்
தக்காளி : 1
மல்லி தூள் : இரண்டு டீ ஸ்பூன்
மிளகாய் தூள் : இரண்டு டீ ஸ்பூன்
புளி -தேவையான அளவு
உப்பு :தேவையான அளவு

அரைக்க :
கடலை பருப்பு : அரை கப்
துவரம் பருப்பு : அரை கப்
வர மிளகாய் : 5
மஞ்சள் தூள் : கால் டீ ஸ்பூன்
கசகசா : கால் டீ ஸ்பூன்
சோம்பு : அரை டீ ஸ்பூன்
இவை எல்லாவற்றையும் தண்ணீர் இல்லாமல் உப்பு சேர்த்து அரைத்தை கொள்ளவும் .சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து இட்லி பானையில் 15 நிமடம் வைத்து அவித்து எடுக்கவும்.

துருவிய தேங்காய் : அரை கப்
(தேங்காவை தனியாக அரைத்து கொள்ளவும் )

தாளிக்க:
சோம்பு : கால் டீ ஸ்பூன்
கறிவேப்பிலை: சிறிது
எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை ;-
வானொலியில் எண்ணெய் விட்டு சோம்பு ,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி போட்டு வதக்கி கொள்ளவும் . பிறகு புளிதண்ணீர் ,மல்லி தூள் ,மிளகாய் தூள் ,உப்பு சேர்த்து குழம்பை சிறிது நேரம் கொதிக்க விடவும் .பிறகு அரைத்த தேங்காவை சேர்க்கவும் .இரண்டு நிமிடம் கழித்து வேகவைத்த பருப்பு உருண்டைகளை சேர்த்து குழம்பை சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும் .

மீன் கோலா உருண்டை

தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் : அரை கப் (தோல் நீக்கப்பட்ட மீன் துண்டுகள் தான் தேவை )
துருவிய தேங்காய் : அரை கப்
பொட்டு
க்கடலை : கால் கப்
பச்சை மிளகாய் : 5
மஞ்சள் தூள் : கால் டீ ஸ்பூன்
கசகசா : கால் டீ ஸ்பூன்
சோம்பு : அரை டீ ஸ்பூன்
றிவேப்பிலை : சிறிது
நல்லேஎண்ணெய்: இரண்டு டீ ஸ்பூன்
எண்ணெய் : இரண்டு கப் பொரி த்து எடுக்க
உப்பு :தேவையான அளவு

செய்முறை
தேங்காய்,மீன்துண்டுகள்,சோம்பு,கசகசா,மஞ்சள்த்தூள்,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை,பொட்டுக் கடலை எல்லாவற்றையும் தண்ணீர் இல்லாமல் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும் .அத்துடன் இரண்டு டீ ஸ்பூன் நல்லேஎண்ணெய் விட்டு பிசறி சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணையில் போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும் .இதே முறையை பயன்படுத்தி கறி,கோழி ,இறால் கோலா உருண்டைகளுக்கு பின்பற்றவும்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள்:-
பச்சை அரிசி: ஒரு கப்
புழுங்கல் அரிசி :ஒரு கப்
உளுந்து : அரை கப்
உப்பு :தேவையான அளவு
தண்ணீர் :தேவையான அளவு

(பச்சை அரிசி, புழுங்கல் அரிசி ,உளுந்து,உப்பு ,எல்லாவற்றையும் ஊறவைத்து அரைத்து கொள்ளவும் .அந்த மாவை ஒரு நாள் இரவு முழுதும் வெளியில் வைத்து புளிக்க வைக்கவும் )

இனிப்பு பணியாரம்

பணியார மாவுடன் சரக்கரை ஏலக்காய் பொடி கலந்து குழிப்பணியார சட்டியில் வார்த்து எடுக்கவும் .

கரப்பணியாரம்

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து தாளித்து வெங்காயம் ,பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி மாவுடன் சேர்த்து கரைத்து வார்த்து எடுக்கவும் .தேங்காய் சட்னி அருமையான சைடு டிஷ் .

மரவள்ளிகிழங்கு ரொட்டி

தேவையான பொருட்கள் :-
மரவள்ளிகிழங்கு - 1(தோல் நீக்கி பொடி பொடியாக நறுக்கிக்கொள்ளவும் )
சர்க்கரை : அரை கப்
பச்சை அரிசி : ஒரு கப்
துருவிய தேங்காய் : அரை கப்

செய்முறை :-
மரவள்ளிகிழங்கு,தண்ணீர் ,சர்க்கரை,ஊறவைத்த பச்சை அரிசி,துருவிய தேங்காய்,சிறிது உப்பு எல்லாத்தையும் நன்றாக அரைத்து கொள்ளவும் .தோசை கல்லில் தோசை போல் வார்த்து எடுக்கவும் .

திங்கள், 16 பிப்ரவரி, 2009

கேரளா அப்பம்

தேவையான் பொருட்கள் :-
பச்சை அரிசி : 3 கப்
வேகவைத்த சோறு : 1 கப்
உப்பு : தேவையான அளவு
தண்ணீர் :தேவையான அளவு
தேங்காய் பால் : தேவையான அளவு
ஈஸ்ட் :1 டீஸ்பூன் (சிறிது சுடுதண்ணீரில் சர்க்கரை சேர்த்து கரைத்து கொள்ளவும் )
சர்க்கரை : 2டீஸ்பூன்

செய்முறை :
ஊறவைத்த பச்சை அரிசி,வேகவைத்த சோறு, இரண்டையும் தேங்காய் பால் ,தண்ணீர் சேர்த்து ,அரைத்து கொள்ளவும் .அரைத்தவுடன் அதில் கரைத்து வைத்து இருக்கும் ஈஸ்ட்டை சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும் .மாவை ஒரு நாள் இரவு வெளியில் வைத்தால் நன்கு புளித்து விடும் .மறுநாள் காலையில் உப்பு பசும் பால் சேர்த்து கரைத்து ஆப்ப சட்டியில் வார்த்து எடுக்கவும் .மாவு ரொம்ப தண்ணியாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் .

மிளகு ரசம்

தேவையான பொருட்கள்:-
கடுகு : சிறிதளவு
சீரகம் : சிறிதளவு
வர மிளகாய் :2
மஞ்சள் தூள் :கால் டீஸ்பூன்
பெருங்காயம் :சிறிதளவு
தக்காளி : 1
புளி : சிறிது

அரைக்க
மிளகு : 2டீஸ்பூன்
சீரகம் :1டீஸ்பூன்
பூண்டு:இரண்டு பல்

(மூன்றையும் அரைத்து கொள்ளவும் )

செய்முறை:
இரண்டு கப் தண்ணீரில் புளி,தக்காளி இரண்டையும் கரைத்து எடுத்து கொள்ளவும். அந்த கரைசலுடன் மஞ்சள் தூள் ,அரைத்த மிளகு சீரகம் ,உப்பு , சேர்த்து கலக்கிகொள்ளவும் .வாணலியில் எண்ணை விட்டு கடுகு ,சீரகம் ,கறிவேப்பிலை, ,வரமிளகாய்,பெருங்காயம் தாளித்து கொள்ளவும். பிறகு புளி தக்காளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு மல்லித்தலை தூவி இறக்கவும்.

அன்னாசிப்பழ ரசம்

தேவையான பொருட்கள்:-
அண்ணாசி பழம் துண்டுகள்: அரை கப்
கடுகு : சிறிதளவு
சீரகம் : சிறிதளவு
வர மிளகாய் :2
மஞ்சள் தூள் :கால் டீஸ்பூன்
சீராக பொடி: 1 டீஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு : கால் கப்
தக்காளி : 1
பூண்டு:இரண்டு பல் (தட்டி கொள்ளவும் )
பெருங்காயம் :சிறிதளவு

செய்முறை:
ஒரு வாணலியில் இரண்டு கப் தண்ணீர் வைத்து அதில் அண்ணாசி துண்டுகளை போட்டு 5நிமிடம் கொதிக்கவிடவும்.பிறகு அந்த தண்ணீரில் தக்காளி,வேகவைத்த துவரம் பருப்பு இரண்டையும் சேர்த்து கரைத்து கொள்ளவும் .அந்த கரைசலுடன் மஞ்சள் தூள் ,சீராக பொடி ,உப்பு , சேர்த்து கலக்கிகொள்ளவும் .வாணலியில் எண்ணை விட்டு கடுகு ,சீரகம் ,கறிவேப்பிலை ,வரமிளகாய்,பெருங்காயம் ,பூண்டு தாளித்து கொள்ளவும். பிறகு தக்காளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு மல்லித்தலை தூவி இறக்கவும்.

தக்காளி ரசம்

தேவையான பொருட்கள்
கடுகு : சிறிதளவு
சீரகம் : சிறிதளவு
வர மிளகாய் :2
மஞ்சள் தூள் :கால் டீஸ்பூன்
சீராக பொடி: 1 டீஸ்பூன்
மிளகு பொடி : 1 டீஸ்பூன்
தக்காளி : 3(சுடுதண்ணீரில் போட்டு தோல் உறித்துக்கொள்ளவும்)
பூண்டு:இரண்டு பல் (தட்டி கொள்ளவும் )
பெருங்காயம் :சிறிதளவு
எலும்பிச்சை சாறு :இரண்டு தேக்கரண்டி

செய்முறை:
இரண்டு கப் தண்ணீரில் தக்காளியை கரைத்து கொள்ளவும் .அந்த கரைசலுடன் மஞ்சள் தூள் ,மிளகு பொடி ,சீராக பொடி ,உப்பு , சேர்த்து கலக்கிகொள்ளவும் . வாணலியில் எண்ணை விட்டு கடுகு ,சீரகம் ,கறிவேப்பிலை ,வரமிளகாய்,பெருங்காயம் ,பூண்டு தாளித்து கொள்ளவும். பிறகு தக்காளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு எலும்பிச்சை சாற்றை ஊற்றி மல்லித்தலை தூவி இறக்கவும்.

ரவா கிச்சடி

தேவையான பொருட்கள் :-

ரவா : 1 கப் (எண்ணெய் இல்லாமல் வருத்து கொள்ளவும் )
பொடியாக நறுக்கிய வெங்காயம் : அரை கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி: 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் :5
காரட் ,பீன்ஸ் ,பச்சை பட்டாணி : 1 கப்
மஞ்சள் பொடி: 1 டீ ஸ்பூன்
எண்ணெய் : 2 டீ ஸ்பூன்
நெய் : 2 டீ ஸ்பூன்

செய்முறை :

வாணலியில்எண்ணெய்,நெய் விட்டு கடுகு ,உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,,இஞ்சி ,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும்.பிறகு காய்கறி,தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.பிறகு இரண்டு ரவை ,உப்பு ,சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்.வெந்தவுடன் அடுப்பை அனைத்து மல்லித்தலை தூவி இறக்கவும் .

பீட்ரூட் அல்வா

தேவையான பொருட்கள்:-
பீட்ரூட் - 1கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
நெய் - 1/4 கிலோ
ஏலக்காய் - 3
முந்திரி - 15
திராட்சை - 10

செய்முறை:-
பீட்ரூட் தோலை சீவி வேகவைத்து கூழ் பண்ணிக்கொள்ளவும் . வாணலியில் பால் ,பீட்ரூட் கூழ்,சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.அல்வா தண்ணீர் வத்தி கெட்டியாக வரும் போது நெய் சேர்த்து சுருள கிண்டவும்.நெய்யில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் வறுத்து அல்வாவுடன் சேருங்கள்.

அடை

தேவையான பொருட்கள்:-
பச்சை அரிசி :1
கடலை பருப்பு,துவரம்ப்பருப்பு உளுத்தம்ப்பருப்பு:3:3:3:=1கப்
வத்தல் மிளகாய் :4
தேங்காய் : கால் கப்
சோம்பு :அறை ஸ்பூன்
பொடியாக நறுக்கிய :வெங்கயாம்
கருவேப்பில்லை :சிறிது

செய்முறை:
பச்சை அரிசி ,கடலை பருப்பு,துவரம்ப்பருப்பு ,உளுத்தம்ப்பருப்பு எல்லாவற்றையும் இரண்டு மணி நேரம் ஊறவைத்து,வத்தல் மிளகாய் ,சோம்பு ,தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.அடை மாவு கெட்டியாக இருக்கவேண்டும்.அரைத்த பின்பு வெங்காயம் ,கருவேப்பில்லை சேர்த்து தட்டவும்.சர்க்கரை அல்லது அவியல் சரியான சைடு டிஷ் .

கேரட் அல்வா

தேவையானவை :
கேரட் : இரண்டு கப் (வேகவைத்து கூழ் பண்ணிக்கொள்ளவும்)
பால் : 1/4 லிட்டர்
பாதாம் பொடி : 1/2 கப்
சர்க்கரை : 1 கப்
ஏலக்காய் பொடி : 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு : 10
திராட்சை : 10
நெய் :கால் கப்

செய்முறை :
பாலையும் சர்க்கரையும் சேர்த்து நன்கு சுண்டும்வரை காய்ச்சவும். கேரட்டைத் ஒரு தனி பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக விடவும். வேகவைத்து கூழ் பண்ணிக்கொள்ளவும். சுண்டிய பாலில் பாதாம் பொடி, கேரட் சேர்த்து பாலின் அடி பாத்திரத்தில் ஒட்டாதவாறு மிதமான சூட்டில் நன்கு கிளறவும். இறக்குவதற்கு முன் முந்திரி, திராட்சை, ஏலத்தூள் போட்டு இறக்கவும் . சிறிது குங்குமப்பூவையும் சேர்க்கலாம்.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

வெந்தையக்கீரை சாதம்

தேவையானவை:

சீரக சம்பா அரிசி - 2 கப்,

வெந்தயக்கீரை - ஒரு கப்

தக்காளி:1

வெங்காயம் - தலா 1 (நறுக்கிக் கொள்ளவும்),

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

பச்சைமிளகாய் - 3

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய்,

உப்பு

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி -பூண்டு விழுது சேர்த்துக் வதக்கவும். பிறகு உப்பு,வெந்தயக்கீரை, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து,அரிசியை சேர்த்து குக்கரை மூடவும். குறைந்த தீயில் 7 முதல் 10 நிமிடம் வரை வைத்து பரிமாறவும்.

காளான் பிரியாணி

தேவையானவை:

பாசுமதி அரிசி - 2 கப்,

காளான் - ஒரு பாக்கெட்,

தக்காளி : 2

வெங்காயம் - தலா 2 (பொடியாக நறுக்கவும்)

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

தேங்காய்ப் பால் - கால் கப்

பிரியாணி இலை - 1,

பட்டை - :2

கிராம்பு:2

ஏலக்காய் - :2

பொடியாக நறுக்கிய புதினா, மல்லித்தலை - கால் கப்,

வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியைக் கழுவி ஊற விடவும். குக்கரில், வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, புதினா, மல்லித்தலை, சுத்தம் செய்த காளான் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். உப்பு, அரிசி சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, குக்கரை மூடவும். பிரஷர் வந்தவுடன் குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.

வெஜிடபிள் பிரியாணி

தேவையானவை:

பாசுமதி அரிசி - 2 கப்

கடைந்த தயிர் - ஒரு கப்

நறுக்கிய வெங்காயம் - 2

தக்காளி விழுது - ஒரு கப்

நறுக்கிய கேரட், உருளை, பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர் கலவை - 2 கப்

நெய் - 5 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1

தேங்காய்ப் பால் - கால் கப்

பிரியாணி இலை - 2

புதினா, மல்லித்தலை - கால் கப்

உப்பு - தேவையான அளவு.

பட்டை : 2

கிராம்பு :2

ஏலக்காய் :2

அரைக்க:

பச்சைமிளகாய் - 4

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 6 பல்

முந்திரி - 15.

செய்முறை:

அரிசியை நன்றாகக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் நெய் விட்டு, பிரியாணி இலையைப் போட்டு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா விழுது, தக்காளி விழுது, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் காய்கறி கலவை, தயிர், உப்பு சேர்க்கவும். அரிசி, 4 கப் தண்ணீர், தேங்காய்ப் பால் விட்டு கொதிக்க விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும், புதினா, கொத்தமல்லி தூவி கிளறி குக்கரை மூடி, 'சிம்'மில் 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.

சுரக்காய் பால்க்கறி

தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய சுரக்காய் : 1 கப்
சோம்பு : சிறிதளவு
பட்டை : 2
கிராம்பு :2
ஏலக்காய் :2

அரைக்க
தேங்காய் : அரை கப்
பச்சை மிளகாய் : 5
முந்திரி பருப்பு : 10
( இவை எல்லாவற்றையும் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும் )

செய்முறை :
வாணலியில் எண்ணை விட்டு சோம்பு கறிவேப்பிலை தாளித்து அதில் சுரக்கையை போட்டு இரண்டு கப் தண்ணீர்,உப்பு , சேர்த்து சுரக்கையை வேகவிடவும் .சுரக்காய் வெந்தவுடன் அதில் அரைத்து வைத்து இருக்கும் தேங்கையை சேர்த்து நன்கு கிளறவும். பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு மல்லித்தலை தூவி இறக்கவும்.

எலும்பிச்சை ரசம்

தேவையான பொருட்கள்
கடுகு : சிறிதளவு
சீரகம் : சிறிதளவு
வர மிளகாய் :2
மஞ்சள் தூள் :கால் டீஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு : கால் கப்
ரசப்பொடி : டீஸ்பூன்
தக்காளி : 1
பூண்டு:இரண்டு பல் (தட்டி கொள்ளவும் )
பெருங்காயம் :சிறிதளவு
எலும்பிச்சை சாறு :இரண்டு தேக்கரண்டி

செய்முறை:
இரண்டு கப் தண்ணீரில் தக்காளியையும்,வேக வைத்த துவரம்பருப்பையும் கரைத்து கொள்ளவும் .அந்த கரைசலுடன் மஞ்சள் தூள் ,ரசப்பொடி ,உப்பு சேர்த்து கலக்கிகொள்ளவும்.வாணலியில் எண்ணை விட்டு கடுகு ,சீரகம் ,கருவேப்பில்லை ,வரமிளகாய்,பெருங்காயம் ,பூண்டு தாளித்து கொள்ளவும். பிறகு தக்காளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு எலும்பிச்சை சாற்றை ஊற்றி மல்லித்தலை தூவி இறக்கவும்.

ரசம்

தேவையான பொருட்கள்
கடுகு : சிறிதளவு
சீரகம் : சிறிதளவு
வர மிளகாய் :2
மஞ்சள் தூள் :கால் டீஸ்பூன்
ரசப்பொடி : டீஸ்பூன்
தக்காளி : 1
பூண்டு:இரண்டு பல் (தட்டி கொள்ளவும் )
பெருங்காயம் :சிறிதளவு
புளி :சிறிதளவு

செய்முறை:
முதலில் புளியை கரைத்து கொள்ளவும் .அத்துடன் தக்காளியையும் கரைத்து கொள்ளவும் .புளி கரைசலுடன் மஞ்சள் தூள் ,ரசப்பொடி ,உப்பு சேர்த்து கலக்கி
கொள்ளவும் . வாணலியில் எண்ணை விட்டு கடுகு ,சீரகம் ,கருவேப்பில்லை ,வரமிளகாய்,பெருங்காயம் ,பூண்டு தாளித்து கொள்ளவும் .பிறகு புளி கரைசலை
ஊற்றி ரசம் நுரை தள்ளியவுடன் மல்லிதலை தூவி இறக்கவும்.

வேப்பம்பூ ரசம்

தேவையானவை :

வேப்பம்பூ :1 கரண்டி
மிளகாய் வற்றல் : 4
நெய் : 1/2 கரண்டி
கல்கண்டு : 1 கட்டி
தக்காளி :1
மிளகாய் வற்றல் :2
எண்ணெய் : ௧ டீஸ்பூன்
உப்பு :தேவையான அளவு
புளி :சிறிது
கடுகு :சிறிது
வேகவைத்த துவரம்பருப்பு : கால் கப்
சீரகம் :சிறிது
கருவேப்பில்லை :சிறிது

செய்முறை :
வேப்பம்பூவை நெய்யில் வறுத்து சிறது நீர் விட்டு கல்கண்டு கரையும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி நீர் எடுத்து கொள்ளவும். புளியைக் கரைத்து, அதில் மஞ்சள்தூள்,உப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் சேர்த்து கொதிக்க விடவும். பாதியாக வற்றியதும் பருப்பு, வேப்பம் பூ நீர் சேர்த்து கொதித்ததும் கடுகு,சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும்.

மனத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையான பொருட்கள் :
மனத்தக்காளி வற்றல்: 4 டேபிள்ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் : 15

தக்காளி : 1

எண்ணெய் : 5 டேபிள்ஸ்பூன்
கடுகு : சிறிதளவு
உளுத்தம் பருப்பு : சிறிதளவு
கறிவேப்பிலை : சிறிதளவு







புளி : எலுமிச்சையளவு
சாம்பார் பொடி : 2 டேபிள்ஸ்பூன்

உப்பு : தேவைக்கு

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை ,மனத்தக்காளி வற்றல்ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வதக்கவும். வதங்கியவுடன் தக்காளி,சாம்பார் பொடியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.குழம்பு நன்கு கொதித்தவுடன் விட்டு இறக்கவும் .

வெண் பொங்கல்

தேவையானவை :

அரிசி 1- கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்

மிளகு -11/2 டீஸ்பூன்கள்
சீரகம் - 11/2 டீஸ்பூன்கள்
முந்திரிப்பருப்பு - 12
இஞ்சி - சிறிதளவு
உப்பு - 11/2 டீஸ்பூன்கள்
நெய் - அரை கப்

செய்முறை :

வறுத்த பாசிப்பருப்பையும்,அரிசியையும் நன்றாகக் களைந்து கொள்ளவும்.சுமார் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து,கொதித்தபின், அரிசி,பருப்பு இவற்றைப் போட்டு,அடிக்கடி கிளறி விடவும்.பதமானபின் உப்பைப் போட்டுக் குழைய வேக விட்டு இறக்கவும்.பொடி செய்த சீரகம்,மிளகு,சிறு துண்டங்களாக நெய்யில் வறுத்த இஞ்சி,முந்திரிப்பருப்பு இவற்றை வெந்த பொங்கலில் போட்டு கையில் ஒட்டாமல் கிளறி எடுக்கவும்.

கேழ்வரகு இட்லி

தேவையான பொருட்கள்:-

கேழ்வரகு- 4 கப்

உளுத்தம்பருப்பு- 200 கிராம்

அரிசி மாவு- 1/2 கப்

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து அதனோடு கேழ்வரகு மாவு, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு கலந்து மறுநாள் இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்தால் போதும் கேழ்வரகு இட்லி ரெடி. சாப்பிடச் சுவையாகவும் உடம்புக்குப் போஷாக்கு அளிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

பேசரட்டு

தேவையான பொருட்கள் :

ஊறவைத்த பச்சை பயிர் : ஒரு கப்
ஊறவைத்த பச்சை அரிசி : கால் கப்
பச்சை மிளகாய் : 5
இஞ்சி : அரை துண்டு
மல்லித்தழை : ஒரு கப்
உப்பு : தேவையான அளவு

செய்முறை :

மேலே கொடுக்கபட்ட பொருட்கள் அனைத்தையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும். தோசை போல சிறிது சிறிதாக வார்த்து எடுக்கவும். தேங்காய் சட்னி இதற்கு அருமையான காம்பினேஷன்.

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

தேவையானவை :

பிஞ்சு கத்திரிக்காய் : கால் கிலோ

மசாலாவிற்கு :

வர மிளகாய் : 6
புளி : சிறிதளவு
மல்லி விதை : ஒன்றரை டீஸ்பூன்
சீரகம் : அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் : ஐந்தாறு
பூண்டு : 2 பல்
உப்பு : தேவையான அளவு

தாளிக்க :
எண்ணெய் : 5 டேபிள்ஸ்பூன்
கடுகு : சிறிதளவு
உளுத்தம் பருப்பு : சிறிதளவு
கறிவேப்பிலை : சிறிதளவு

செய்முறை :

கத்திரிக்காயைக் காம்பு மட்டும் நீக்கி பாவாடையுடன்('அதிகாலை' பொறுப்பல்ல, ஆசிரியர் அப்படித்தான் எழுதியிருக்கிறார்). அப்படியே நான்காக வகிர்ந்து கொள்ளவும். மசாலாவிற்கு உள்ள சாமான்களை விழுதாக அரைத்து எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். வதக்கிய மசாலா ஆறியபின் அதைக் காயினுள் திணித்து காயை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். தணலைச் சின்னதாக வைத்து, மூடி வைத்து வதக்கவும். அரைத்த மசாலா மீதம் இருந்தால் அதையும் காயின் மேல் போட்டு விடவும். கத்திரிக்காய் வெந்து முறுகலாக வதங்கியதும் கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

குறிப்பு :

மசாலாவுடன் புளி வைத்து அரைப்பதால் இந்தத் தயாரிப்பில் கத்திரிக்காயின் காரல் இருக்காது. கத்திரிக்காயை அரிசி கழுவிய நீரில் 5 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால் இன்னும் சுத்தமாகக் கார்ப்பு இருக்காது.

கேழ்வரகு ரொட்டி

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
தேங்காய் -1/2 கப்
வெல்லம் -1/2 கப்

செய்முறை:

தேங்காய் ,வெல்லம் ,சிறிது உப்பு இவற்றை எல்லாத்தையும் கேழ்வரகு மாவில் கொட்டி, சேர்த்து போதுமான அளவு நீர் ஊற்றி கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வாழையிலையில் எண்ணெய் தடவி சிறிது மாவை ரொட்டிபோல் தட்டி தோசைக் கல்லில் போட்டு வேக வைத்து எடுக்கவும். நன்கு சிவந்த பின்பு எடுத்தால் கேப்பை ரொட்டி மிகவும் வாசனையுடன் ருசியாக இருக்கும்.

மிளகு குழம்பு

தேவையான பொருட்கள் :
மல்லி : 2 டீ ஸ்பூன்
மிளகு : 2 டீ ஸ்பூன்
து. பருப்பு : 2 டீ ஸ்பூன்
உ.பருப்பு : 2 டீ ஸ்பூன்
சீரகம் : கால் டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் : தேவையான அளவு
மஞ்சள் பொடி : கால் டீ ஸ்பூன்
பூண்டு : நாலு பல்லு
புளீ : எலுபிச்சை அளவு
வெல்லம் : சிறிது
நல்ல எண்ணெய் : கால் கப்
கருவேப்பில்லை : தேவையான அளவு

அரைக்க வேண்டியவை

மல்லி : 2 டீ ஸ்பூன்
மிளகு : 2 டீ ஸ்பூன்
து. பருப்பு : 2 டீ ஸ்பூன்
உ.பருப்பு : 2 டீ ஸ்பூன்
சீரகம் : கால் டீ ஸ்பூன்

எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும் .

செய்முறை :

குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு ,உ.பருப்பு ,கருவேப்பில்லை ,பூண்டு சேர்த்து வதக்கவும்.பூண்டு வதங்கியதும் புளி கரைசல் ,அரைத்து வைத்து இருக்கும் பொடி,உப்பு ,மஞ்சள் இவை எல்லாத்தையும் சேர்க்கவும்.குழம்பு நன்கு கொதித்கும் பொழுது வெள்ளத்தை சேர்க்கவும் .ஐந்து நிமிடம் வைத்து பிறகு இறக்கிவிடவும்.

காளை கருவாட்டு குழம்பு

தேவையான பொருட்கள் :
காளை கருவாடு

சாம்பார் வெங்காயம் : 15
தக்காளி : 1

சோம்பு : 1/2 கரண்டி
வெந்தயம் : 1/2 கரண்டி,

கறிவேப்பிலை : கூடுத‌லாக‌வே

நல்ல எண்ணெய்/ஆலிவ் எண்ணெய்: கொஞ்சமா







புளி : எலுமிச்சையளவு
மல்லித் தூள் : 4 மே.கரண்டி

மிளகாய் தூள் : 2 மே.கரண்டி

(காரம் தேவைப்படுவோரர்அதற்கேற்ப: கூடுதலாக‌)

உப்பு : தேவைக்கு

(குறிப்பு : புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு கரைக்கவும், அதில் உப்பு, தக்காளி, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கரைத்து வைத்து கொள்ளவும்)

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு, வெந்தயம், சோம்பு,கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வதக்கவும். வதங்கியவுடன் இந்தப் புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் குழம்பில் காளை கருவாட்டு துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போடவும். குறைவான சூட்டில் சிறிது நேரம் கருவாட்டை வேக விடவும். கருவாடு நன்றாக வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.

முட்டை குருமா

தேவையான பொருட்கள் :

வேகவைத்த முட்டை : முன்று ,

பெரிய வெங்காயம் : 1 கப்,

தக்காளி: 1 கப்

மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்,

உப்பு : தேவையான அளவு,

இஞ்சி -பூண்டு:விழுது

தாளிக்க :
சோம்பு
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
கறிவேப்பிலை
எண்ணெய்

(இவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)
அரைக்க :
தேங்காய் : அரை கப்
கசகசா : கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் : 4
முந்திரி பருப்பு : 5


செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, இஞ்சி -பூண்டு:விழுது ,அரைத்த தேங்காய், மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து இறக்கவும். நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து வேக வைத்த முட்டையை அந்த குருமாவில் போடவும்.

சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள் :
கோழி : அரை கிலோ
பாஸ்மதி அரிசி : இரண்டு கப்
பெரிய வெங்காயம் : 1 கப்
நறுக்கிய தக்காளி : 1 கப்
மல்லித் தலை: ¼ கப்
தேங்காய் பால் : 1 கப்
பொதினாத் தலை : ¼ கப்
மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
தாளிக்க :
சோம்பு : கால் ஸ்பூன்
பட்டை : கிராம்பு
ஏலக்காய் : இரண்டு
கறிவேப்பிலை : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
அரைக்க :
இஞ்சி : 1/2
பூண்டு : 4
கசகசா : கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் : 4
கரம் மசாலா : ஸ்பூன்
கிராம்பு : இரண்டு
(இவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)
(அரிசியை இரண்டு கப் தண்ணீர் விட்டு உறவைக்கவும்,பிறகு தண்ணீர்யை வடித்துவிடவும் .ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வறுத்து கொள்ளவும் )
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த மசாலா ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு ,பொதினா,மல்லி,கோழி, தேங்காய் பால் ,பாஸ்மதி அரிசி முன்று டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேக விடவும். நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து மல்லித் தளை தூவி இறக்கவும்.

மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள் :
மட்டன்:அரைகிலோ(மட்டனைகுக்கரில்வெங்காயம்,உப்பு,
மஞ்சள்சேர்த்து வேகவைத்து கொள்ளவும்)

பாஸ்மதி அரிசி : இரண்டு கப்
பெரிய வெங்காயம் : 1 கப்
நறுக்கிய தக்காளி : 1 கப்
தேங்காய் பால் : 1கப்
கரம் மசாலா :1 ஸ்பூன்
மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
தாளிக்க :
சோம்பு : கால் ஸ்பூன்
பட்டை : கிராம்பு
ஏலக்காய் : இரண்டு
கறிவேப்பிலை : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
அரைக்க :
இஞ்சி : 1/2
பூண்டு : 4
மல்லி தலை : 1/2 கப்
பொதினா தலை : 1/2 கப்
பச்சை மிளகாய் : 4
(இவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)
(அரிசியை இரண்டு கப் தண்ணீர் விட்டு உறவைக்கவும்,பிறகு தண்ணீரை வடித்துவிடவும் .ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வறுத்து கொள்ளவும் )
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த மசாலா ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு மட்டன், தேங்காய் பால் ,பஸ்திமதி அரிசி முன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் விடவும் . அடுப்பை அணைத்து மல்லி இலை தூவி இறக்கவும்.

கறி வறுவல்

தேவையான பொருட்கள் :

கறி : அரை கிலோ(கறியை நன்கு அலசி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வெங்காயம் ,மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும் )

பெரிய வெங்காயம் : 1 கப்

நறுக்கிய தக்காளி : 1 கப்

மஞ்சள் தூள் : அரை ஸ்பூன்

மல்லித்தூள் : அரை ஸ்பூன்

சீரகத்தூள் : அரை ஸ்பூன்

சோம்புத்தூள்: அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் :5

உப்பு : தேவையான அளவு

தேங்காய் பால் : அரை கப்

தாளிக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

பட்டை : கிராம்பு

கறிவேப்பிலை : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

அரைக்க :

இஞ்சி : 1/2

பூண்டு : 5

கசகசா : கால் ஸ்பூன்


செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்தஇஞ்சிபூண்டுவிழுது,மஞ்சள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள்ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு வேக வைத்து இருக்கும் கறி,கறி தண்ணீர் ,தேங்காய் பால்,சேர்த்து நன்கு சுருளக்கிளறி இறக்கவும்.கறி வேக வைத்த தண்ணீர் அதிகம் இருந்தால் கொஞ்சத்தை எடுத்து விடவும் .

கோழி வறுவல்

தேவையான பொருட்கள் :

கோழி : அரை கிலோ

பெரிய வெங்காயம் : 1 கப்

நறுக்கிய தக்காளி : 1 கப்

மஞ்சள் தூள் : அரை ஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

தேங்காய் பால் : அரை கப்

தாளிக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

பட்டை : கிராம்பு

கறிவேப்பிலை : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

அரைக்க :

இஞ்சி : 1/2

பூண்டு : 5

வத்தல் மிளகாய் : 5

கசகசா : கால் ஸ்பூன்

சோம்பு :1/2 ஸ்பூன்

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி விழுது மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு ஸ்பூன், 11/2 டம்லர் தண்ணீர் தேங்காய் பால் சேர்த்து வேக விடவும். நன்கு சுருள கிண்டி அடுப்பை அணைத்து மல்லித் தலை தூவி இறக்கவும்.

கறி குழம்பு

தேவையான பொருட்கள் :

மட்டன் : அரை கிலோ (கறியை நன்கு அலசி மூன்று கப் தண்ணீர் ,சிறிது வெங்காயம் ,மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து குக்கரில் வைத்து நன்கு வேக விடவும் )

சின்ன வெங்காயம் : 1 கப்

நறுக்கிய தக்காளி : 1 கப்

இஞ்சி பூண்டு விழுது : இரண்டு ஸ்பூன்

மல்லித் தூள் : மூன்று ஸ்பூன்

மிளகாய் தூள் : ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

தாளிக்க :

வெந்தயம் : கால் ஸ்பூன்

சோம்பு : கால் ஸ்பூன்

பட்டை : கிராம்பு

கல் பாசி பூ : தேவையான அளவு

பிரியாணி இலை : தேவையான அளவு

கறிவேப்பிலை : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

அரைக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

மிளகு : கால் ஸ்பூன்

பூண்டு : ஒரு பல்

தேங்காய் -1/2 கப்
பச்சை மிளகாய்-2

பொட்டுக்கடலை -2 ஸ்பூன்

கிராம்பு : இரண்டு


(இந்த பொருட்கள் எல்லாவற்றையும் எண்ணெய் இல்லாமல் அரை பொன் வறுவலாக வறுத்து, பூண்டு வைத்து, தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்).

செய்முறை :

வாணலியில்எண்ணெய்விட்டு,பட்டை,கிராம்பு,வெந்தயம்,சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும்.மல்லித் தூள், மிளகாய் தூள் இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்,மல்லி ,மிளகாய் தூள் ஆகியவற்றையும் போட்டு, நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வேக வைத்து இருக்கும் கறி,கறி தண்ணீர்,அரைத்து வைத்து இருக்கும் தேங்காய் எல்லாவற்றையும் வதங்கி கொண்டு இருக்கும் மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறி குழம்பை நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

கோழி குருமா

தேவையான பொருட்கள் :

கோழி : அரை கிலோ

பெரிய வெங்காயம் : 1 கப்

நறுக்கிய தக்காளி : 1 கப்

இஞ்சி ,பூண்டு : 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

தாளிக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

பட்டை : கிராம்பு

ஏலக்காய் : இரண்டு

கறிவேப்பிலை : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

அரைக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

தேங்காய் : அரை கப்

கசகசா : கால் ஸ்பூன்

பச்சை மிளகாய் : 4

முந்திரி பருப்பு : 5

(இவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)

செய்முறை :

வாலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, இஞ்சி ,பூண்டு,அரைத்த தேங்காய், மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு கோழி, இரண்டு டம்லர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேக விடவும். நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து மல்லித் தலை தூவி இறக்கவும்.

கோழிக்குழம்பு

தேவையான பொருட்கள் :

கோழி : அரை கிலோ ,

சின்ன வெங்காயம் : 1 கப்

நறுக்கிய தக்காளி : 1 கப்

இஞ்சி பூண்டு விழுது : இரண்டு ஸ்பூன்

மல்லித் தூள் : மூன்று ஸ்பூன்

மிளகாய் தூள் : ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

தாளிக்க :

வெந்தயம் : கால் ஸ்பூன்

சோம்பு : கால் ஸ்பூன்

பட்டை : கிராம்பு

கல் பாசி பூ : தேவையான அளவு

பிரியாணி இலை : தேவையான அளவு

கறிவேப்பிலை : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

அரைக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

சீரகம் : கால் ஸ்பூன்

மிளகு : கால் ஸ்பூன்

பச்சை அரிசி : கால் ஸ்பூன்

பூண்டு : ஒரு பல்

கிராம்பு : இரண்டு

(இந்த பொருட்கள் எல்லாவற்றையும் எண்ணெய் இல்லாமல் அரை பொன் வறுவலாக வறுத்து, பூண்டு வைத்து, தண்ணீர் இல்லாமல் அரைத்து கொள்ளவும்).

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் ஆகியவற்றை யும் போட்டு, நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மல்லித் தூள், மிளகாய் தூள் இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும். அந்த மசாலாவை நறுக்கிய கோழி துண்டுகளுடன் நன்கு பிசைந்து கொள்ளவும். வதங்கி கொண்டு இருக்கும் மசாலாவுடன் கோழியை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்கு கிளறி, உப்பு சேர்த்து குறைந்த சூட்டில் வேகவிடவும். கோழி நன்றாக வெந்தவுடன் பொடித்து வைத்து இருக்கும் மசாலாவை கொதித்து கொண்டு இருக்கும் குழம்புடன் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை நிறுத்தி விடவும்.