Asaivam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Asaivam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 பிப்ரவரி, 2009

மீன் கோலா உருண்டை

தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் : அரை கப் (தோல் நீக்கப்பட்ட மீன் துண்டுகள் தான் தேவை )
துருவிய தேங்காய் : அரை கப்
பொட்டு
க்கடலை : கால் கப்
பச்சை மிளகாய் : 5
மஞ்சள் தூள் : கால் டீ ஸ்பூன்
கசகசா : கால் டீ ஸ்பூன்
சோம்பு : அரை டீ ஸ்பூன்
க
றிவேப்பிலை : சிறிது
நல்லேஎண்ணெய்: இரண்டு டீ ஸ்பூன்
எண்ணெய் : இரண்டு கப் பொரி த்து எடுக்க
உப்பு :தேவையான அளவு

செய்முறை
தேங்காய்,மீன்துண்டுகள்,சோம்பு,கசகசா,மஞ்சள்த்தூள்,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை,பொட்டுக் கடலை எல்லாவற்றையும் தண்ணீர் இல்லாமல் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும் .அத்துடன் இரண்டு டீ ஸ்பூன் நல்லேஎண்ணெய் விட்டு பிசறி சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணையில் போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும் .இதே முறையை பயன்படுத்தி கறி,கோழி ,இறால் கோலா உருண்டைகளுக்கு பின்பற்றவும்.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

காளை கருவாட்டு குழம்பு

தேவையான பொருட்கள் :
காளை கருவாடு

சாம்பார் வெங்காயம் : 15
தக்காளி : 1

சோம்பு : 1/2 கரண்டி
வெந்தயம் : 1/2 கரண்டி,

கறிவேப்பிலை : கூடுத‌லாக‌வே

நல்ல எண்ணெய்/ஆலிவ் எண்ணெய்: கொஞ்சமா







புளி : எலுமிச்சைய‌ளவு
மல்லித் தூள் : 4 மே.கரண்டி

மிளகாய் தூள் : 2 மே.கரண்டி

(கார‌ம் தேவைப்ப‌டுவோரர்அத‌ற்கேற்ப‌ : கூடுத‌லாக‌)

உப்பு : தேவைக்கு

(குறிப்பு : புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு கரைக்கவும், அதில் உப்பு, தக்காளி, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கரைத்து வைத்து கொள்ளவும்)

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு, வெந்தயம், சோம்பு,கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வதக்கவும். வதங்கியவுடன் இந்தப் புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் குழம்பில் காளை கருவாட்டு துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போடவும். குறைவான சூட்டில் சிறிது நேரம் கருவாட்டை வேக விடவும். கருவாடு நன்றாக வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.

முட்டை குருமா

தேவையான பொருட்கள் :

வேகவைத்த முட்டை : முன்று ,

பெரிய வெங்காயம் : 1 கப்,

தக்காளி: 1 கப்

மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்,

உப்பு : தேவையான அளவு,

இஞ்சி -பூண்டு:விழுது

தாளிக்க :
சோம்பு
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
கறிவேப்பிலை
எண்ணெய்

(இவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)
அரைக்க :
தேங்காய் : அரை கப்
கசகசா : கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் : 4
முந்திரி பருப்பு : 5


செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, இஞ்சி -பூண்டு:விழுது ,அரைத்த தேங்காய், மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து இறக்கவும். நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து வேக வைத்த முட்டையை அந்த குருமாவில் போடவும்.

சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள் :
கோழி : அரை கிலோ
பாஸ்மதி அரிசி : இரண்டு கப்
பெரிய வெங்காயம் : 1 கப்
நறுக்கிய தக்காளி : 1 கப்
மல்லித் தலை: ¼ கப்
தேங்காய் பால் : 1 கப்
பொதினாத் தலை : ¼ கப்
மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
தாளிக்க :
சோம்பு : கால் ஸ்பூன்
பட்டை : கிராம்பு
ஏலக்காய் : இரண்டு
கறிவேப்பிலை : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
அரைக்க :
இஞ்சி : 1/2
பூண்டு : 4
கசகசா : கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் : 4
கரம் மசாலா : ஸ்பூன்
கிராம்பு : இரண்டு
(இவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)
(அரிசியை இரண்டு கப் தண்ணீர் விட்டு உறவைக்கவும்,பிறகு தண்ணீர்யை வடித்துவிடவும் .ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வறுத்து கொள்ளவும் )
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த மசாலா ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு ,பொதினா,மல்லி,கோழி, தேங்காய் பால் ,பாஸ்மதி அரிசி முன்று டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேக விடவும். நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து மல்லித் தளை தூவி இறக்கவும்.

மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள் :
மட்டன்:அரைகிலோ(மட்டனைகுக்கரில்வெங்காயம்,உப்பு,
மஞ்சள்சேர்த்து வேகவைத்து கொள்ளவும்)

பாஸ்மதி அரிசி : இரண்டு கப்
பெரிய வெங்காயம் : 1 கப்
நறுக்கிய தக்காளி : 1 கப்
தேங்காய் பால் : 1கப்
கரம் மசாலா :1 ஸ்பூன்
மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
தாளிக்க :
சோம்பு : கால் ஸ்பூன்
பட்டை : கிராம்பு
ஏலக்காய் : இரண்டு
கறிவேப்பிலை : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
அரைக்க :
இஞ்சி : 1/2
பூண்டு : 4
மல்லி தலை : 1/2 கப்
பொதினா தலை : 1/2 கப்
பச்சை மிளகாய் : 4
(இவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)
(அரிசியை இரண்டு கப் தண்ணீர் விட்டு உறவைக்கவும்,பிறகு தண்ணீரை வடித்துவிடவும் .ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வறுத்து கொள்ளவும் )
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த மசாலா ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு மட்டன், தேங்காய் பால் ,பஸ்திமதி அரிசி முன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் விடவும் . அடுப்பை அணைத்து மல்லி இலை தூவி இறக்கவும்.

கறி வறுவல்

தேவையான பொருட்கள் :

கறி : அரை கிலோ(கறியை நன்கு அலசி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வெங்காயம் ,மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும் )

பெரிய வெங்காயம் : 1 கப்

நறுக்கிய தக்காளி : 1 கப்

மஞ்சள் தூள் : அரை ஸ்பூன்

மல்லித்தூள் : அரை ஸ்பூன்

சீரகத்தூள் : அரை ஸ்பூன்

சோம்புத்தூள்: அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் :5

உப்பு : தேவையான அளவு

தேங்காய் பால் : அரை கப்

தாளிக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

பட்டை : கிராம்பு

கறிவேப்பிலை : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

அரைக்க :

இஞ்சி : 1/2

பூண்டு : 5

கசகசா : கால் ஸ்பூன்


செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்தஇஞ்சிபூண்டுவிழுது,மஞ்சள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள்ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு வேக வைத்து இருக்கும் கறி,கறி தண்ணீர் ,தேங்காய் பால்,சேர்த்து நன்கு சுருளக்கிளறி இறக்கவும்.கறி வேக வைத்த தண்ணீர் அதிகம் இருந்தால் கொஞ்சத்தை எடுத்து விடவும் .

கோழி வறுவல்

தேவையான பொருட்கள் :

கோழி : அரை கிலோ

பெரிய வெங்காயம் : 1 கப்

நறுக்கிய தக்காளி : 1 கப்

மஞ்சள் தூள் : அரை ஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

தேங்காய் பால் : அரை கப்

தாளிக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

பட்டை : கிராம்பு

கறிவேப்பிலை : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

அரைக்க :

இஞ்சி : 1/2

பூண்டு : 5

வத்தல் மிளகாய் : 5

கசகசா : கால் ஸ்பூன்

சோம்பு :1/2 ஸ்பூன்

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி விழுது மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு ஸ்பூன், 11/2 டம்லர் தண்ணீர் தேங்காய் பால் சேர்த்து வேக விடவும். நன்கு சுருள கிண்டி அடுப்பை அணைத்து மல்லித் தலை தூவி இறக்கவும்.

கறி குழம்பு

தேவையான பொருட்கள் :

மட்டன் : அரை கிலோ (கறியை நன்கு அலசி மூன்று கப் தண்ணீர் ,சிறிது வெங்காயம் ,மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து குக்கரில் வைத்து நன்கு வேக விடவும் )

சின்ன வெங்காயம் : 1 கப்

நறுக்கிய தக்காளி : 1 கப்

இஞ்சி பூண்டு விழுது : இரண்டு ஸ்பூன்

மல்லித் தூள் : மூன்று ஸ்பூன்

மிளகாய் தூள் : ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

தாளிக்க :

வெந்தயம் : கால் ஸ்பூன்

சோம்பு : கால் ஸ்பூன்

பட்டை : கிராம்பு

கல் பாசி பூ : தேவையான அளவு

பிரியாணி இலை : தேவையான அளவு

கறிவேப்பிலை : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

அரைக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

மிளகு : கால் ஸ்பூன்

பூண்டு : ஒரு பல்

தேங்காய் -1/2 கப்
பச்சை மிளகாய்-2

பொட்டுக்கடலை -2 ஸ்பூன்

கிராம்பு : இரண்டு


(இந்த பொருட்கள் எல்லாவற்றையும் எண்ணெய் இல்லாமல் அரை பொன் வறுவலாக வறுத்து, பூண்டு வைத்து, தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்).

செய்முறை :

வாணலியில்எண்ணெய்விட்டு,பட்டை,கிராம்பு,வெந்தயம்,சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும்.மல்லித் தூள், மிளகாய் தூள் இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்,மல்லி ,மிளகாய் தூள் ஆகியவற்றையும் போட்டு, நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வேக வைத்து இருக்கும் கறி,கறி தண்ணீர்,அரைத்து வைத்து இருக்கும் தேங்காய் எல்லாவற்றையும் வதங்கி கொண்டு இருக்கும் மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறி குழம்பை நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

கோழி குருமா

தேவையான பொருட்கள் :

கோழி : அரை கிலோ

பெரிய வெங்காயம் : 1 கப்

நறுக்கிய தக்காளி : 1 கப்

இஞ்சி ,பூண்டு : 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

தாளிக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

பட்டை : கிராம்பு

ஏலக்காய் : இரண்டு

கறிவேப்பிலை : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

அரைக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

தேங்காய் : அரை கப்

கசகசா : கால் ஸ்பூன்

பச்சை மிளகாய் : 4

முந்திரி பருப்பு : 5

(இவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, இஞ்சி ,பூண்டு,அரைத்த தேங்காய், மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு கோழி, இரண்டு டம்லர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேக விடவும். நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து மல்லித் தலை தூவி இறக்கவும்.

கோழிக்குழம்பு

தேவையான பொருட்கள் :

கோழி : அரை கிலோ ,

சின்ன வெங்காயம் : 1 கப்

நறுக்கிய தக்காளி : 1 கப்

இஞ்சி பூண்டு விழுது : இரண்டு ஸ்பூன்

மல்லித் தூள் : மூன்று ஸ்பூன்

மிளகாய் தூள் : ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

தாளிக்க :

வெந்தயம் : கால் ஸ்பூன்

சோம்பு : கால் ஸ்பூன்

பட்டை : கிராம்பு

கல் பாசி பூ : தேவையான அளவு

பிரியாணி இலை : தேவையான அளவு

கறிவேப்பிலை : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

அரைக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

சீரகம் : கால் ஸ்பூன்

மிளகு : கால் ஸ்பூன்

பச்சை அரிசி : கால் ஸ்பூன்

பூண்டு : ஒரு பல்

கிராம்பு : இரண்டு

(இந்த பொருட்கள் எல்லாவற்றையும் எண்ணெய் இல்லாமல் அரை பொன் வறுவலாக வறுத்து, பூண்டு வைத்து, தண்ணீர் இல்லாமல் அரைத்து கொள்ளவும்).

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் ஆகியவற்றை யும் போட்டு, நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மல்லித் தூள், மிளகாய் தூள் இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும். அந்த மசாலாவை நறுக்கிய கோழி துண்டுகளுடன் நன்கு பிசைந்து கொள்ளவும். வதங்கி கொண்டு இருக்கும் மசாலாவுடன் கோழியை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்கு கிளறி, உப்பு சேர்த்து குறைந்த சூட்டில் வேகவிடவும். கோழி நன்றாக வெந்தவுடன் பொடித்து வைத்து இருக்கும் மசாலாவை கொதித்து கொண்டு இருக்கும் குழம்புடன் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை நிறுத்தி விடவும்.

நண்டு பொடிமாஸ்

தேவையான பொருட்கள் :

நண்டு : அரை கிலோ(நண்டை வேக வைத்து சதை எடுத்து வைத்துகொள்ளவும்)

உப்பு : தேவையான அளவு
பெரிய வெங்காயம்:1 கப்
பச்சை மிளகாயை:4
தேங்காய்:கால் கப்
அரைக்க
சோம்பு : கால் ஸ்பூன்சிரகம்:கால் ஸ்பூன்
மிளகு:கால் ஸ்பூன்

(இவற்றை தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.


செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம் ,சோம்பு ,கருவேப்பில்லை தாளித்து.நறுக்கி வைத்து இருக்கும் பெரிய வெங்காயம் ,பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கவும் பிறகு அரைத்து வைத்து இருக்கும் சோம்பு ,சிரகம்,மிளகு,மஞ்சள் பொடி போட்டு வதக்கவும் .பிறகு வேக வைத்து எடுத்து வைத்து இருக்கும் நண்டு சதையை அதில் போட்டு நன்கு கிளறவும் .குறைந்த தீயில் இரண்டு நிமிடம் வேகவிடவும் .பிறகு தேங்காய் தூவி இறக்கவும்.

இறால் பிரியாணி

தேவையான பொருட்கள் :
இறால் : அரை கிலோ.
பாஸ்மதி அரிசி : இரண்டு கப்
பெரிய வெங்காயம் : 1 கப்
நறுக்கிய தக்காளி : 1 கப்
மல்லி தலை : ¼ கப்
தேங்காய் பால் : 1 கப்
பொதினா தலை : ¼ கப்
மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
தாளிக்க :
சோம்பு : கால் ஸ்பூன்
பட்டை : கிராம்பு
ஏலக்காய் : இரண்டு
கறிவேப்பிலை : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
அரைக்க :
சோம்பு : கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம்-5
இஞ்சி : 1/2
பூண்டு : 4
கசகசா : கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் : 4
கரம் மசாலா : ஸ்பூன்
கிராம்பு : இரண்டு
(இவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)
(அரிசியை இரண்டு கப் தண்ணீர் விட்டு உறவைக்கவும்,பிறகு தண்ணீர்யை வடித்துவிடவும் .ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வறுத்து கொள்ளவும் )
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த மசாலா ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு ,பொதினா,மல்லி இலை,இறால், ,தேங்காய் பால் ,பாஸ்மதி அரிசி முன்று டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேக விடவும். நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து மல்லித் தளை தூவி இறக்கவும்.

நண்டு வறுவல்

தேவையான பொருட்கள் :

நண்டு : அரை கிலோ

அரைக்க :
சோம்பு : கால் ஸ்பூன்

தேங்காய் : அரை கப்

பூண்டு : 4,கசகசா : கால் ஸ்பூன்

பட்டை மிளகாய் : 4 தக்காளி : 1

கிராம்பு : இரண்டு

உப்பு : தேவையான அளவு

(இவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவை நண்டுல் தடவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்).

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம் ,சோம்பு ,கருவேப்பில்லை தாளித்து ஊரவைத்து இருக்கும் நண்டை அதில் சேர்த்து சிறிது தண்ணிர் விட்டு நன்கு சுருள கிண்டி இருக்கவும் .

இறால் வறுவல்

தேவையான பொருட்கள் :

இறால் : அரை கிலோ

பெரிய வெங்காயம் : 1 கப்

நறுக்கிய தக்காளி : 1 கப்

மஞ்சள் தூள் : அரை ஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

தேங்காய் பால் : அரை கப்

தாளிக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

பட்டை : கிராம்பு

கறிவேப்பிலை : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

அரைக்க :

இஞ்சி : 1/2

பூண்டு : 5

வத்தல் மிளகாய் : 5

கசகசா : கால் ஸ்பூன்

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி விழுது மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு இறால், அறை டம்லர் தண்ணீர் தேங்காய் பால் சேர்த்து வேக விடவும். நன்கு சுருள கிண்டி அடுப்பை அணைத்து மல்லித் தலை தூவி இறக்கவும்.

மீன் வறுவல்

தேவையான பொருட்கள் :

மீன் : அரை கிலோ

அரைக்க :
சோம்பு : கால் ஸ்பூன்

தேங்காய் : அரை கப்

பூண்டு : 4

கசகசா : கால் ஸ்பூன்

பட்டை மிளகாய் : 4

தக்காளி : 1

கிராம்பு : இரண்டு

உப்பு : தேவையான அளவு

(இவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவை மீனில் தடவி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்).

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தவுடன் மீன் துண்டுகளை போட்டு பொறிக்கவும்.