ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

நண்டு குழம்பு

தேவையான பொருட்கள்:
நண்டு - 1 கிலோ
புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு
சின்ன வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 4
சோம்பு -
2 தேக்கரண்டி
வெந்தயம்- 1/4 தேக்கரண்டி
தேங்காய் -1/2 கப்
பச்சை மிளகாய் -4
பூண்டு - 5 பல்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கருவேப்பில்லை
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய்,தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய், சோம்பு, பூண்டு மற்றும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம் ,சோம்பு ,கருவேப்பில்லை தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் , தக்காளி வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும் பிறகு புளியை கரைத்து ஊற்றி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதித்த பிறகு நண்டை போட்டு மூடிவிட வேண்டும். ஐந்து நிமடத்திற்கு பிறகு அரைத்த தேங்காய், சோம்பு, பூண்டுயை குழம்பில் போட்டு நன்கு கிளறி குறைந்த தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக