ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

மீன் : ஒரு கிலோ

சாம்பார் வெங்காயம் : 30 (அல்லது பெரியசிவப்பு வெங்காயம் 1)
தக்காளி : 1

பூண்டு : 8 பெரிய பல்

சோம்பு : 1/2 கரண்டி
வெந்தயம் : 1/2 கரண்டி,

கறிவேப்பிலை : கூடுத‌லாக‌வே

நல்ல எண்ணெய்/ஆலிவ் எண்ணெய்: கொஞ்சமா







புளி : எலுமிச்சையளவு
மல்லித் தூள் : 4 மே.கரண்டி

மிளகாய் தூள் : 2 மே.கரண்டி

(காரம் தேவைப்படுவோரர்அதற்கேற்ப: கூடுதலாக‌)

உப்பு : தேவைக்கு

செய்முறை :

மீனை சு‌த்த‌ம் செ‌ய்து நன்கு கழு‌வி ‌ பாத்திரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். வெங்காய‌ம்,பூண்டு, த‌க்காளியை பொடியாக ந‌றுக்கிக்கொள்ளுங்க‌ள். நல்ல எண்ணெய் விட்டு,சோம்பு,வெந்தயம், பூண்டு,கறிவேப்பிலை ஒவ்வொன்றாய்ச் சேர்த்து தாளித்து வெங்காய‌ம் போட்டு லேசாக‌ வ‌த‌க்கிய‌தும் த‌க்காளி சேர்த்து வதக்கி பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.பிறகு புளியை கரைத்து ஊற்றி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதித்த பிறகு மீனை போட்டு மூடிவிட வேண்டும். மீன் நன்றாக வெந்த பிறகு இறக்கி மூடி வைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக